கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது என நடிகை ரகுல் ப்ரீத் சிங் கூறியுள்ளார்.
2/ 8
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்து வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
3/ 8
தற்போது கமல் ஹாசனின் இந்தியன் 2, சிவகார்த்திகேயனின் அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
4/ 8
இந்நிலையில் சினிமாவில் தான் கடந்து வந்த விஷயங்களைப் பற்றி சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.
5/ 8
அதில், “சினிமாவில் எனக்கு எந்த பின்னணியும் இல்லை. மும்பையிலுள்ள ஒரு ஓட்டலில் அமர்ந்து எந்தெந்த ஆபீஸுக்கு செல்ல வேண்டும், எங்கு நடிகை தேர்வு நடக்கிறது என்பது குறித்து தெரிந்துக் கொள்வேன்.
6/ 8
பையில் சில உடைகளை வைத்துக் கொண்டு காரிலேயே மாற்றிக் கொள்வேன்.
7/ 8
சில வாய்ப்புகள் வருவது போல் இருந்து திடீரென வேறொரு நடிகைக்கு மாறி விடும். சில படங்களில் என்னை ஒப்பந்தம் செய்துவிட்டு, பிறகு மாற்றினார்கள்.
8/ 8
இதையெல்லாம் போராட்டம் என நினைக்க மாட்டேன். ஏனென்றால் கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது” என்று தெரிவித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.