1975 இல் சினிமாவில் அறிமுகமான ரஜினி, 1978 டிசம்பரில் தனது முதல் சோலோ வெள்ளிவிழாப் படத்தை தந்தார். அந்தப் படம் ப்ரியா,. இதன் படப்பிடிப்பு முழுக்க சிங்கப்பூரில் நடந்தது. படத்தின் இறுதி கிளைமாக்ஸில் நாயகி ஸ்ரீதேவியை காரில் கடத்திச் செல்வார்கள். ரஜினி பின்னால் ஒரு காரில் துரத்திச் சென்று, ஸ்ரீதேவியை மீட்க வேண்டும். இந்தக் காட்சியில் ஹாலிவுட்டில் 1968 இல் வெளியான Bullitt படத்தின் கார் சேஸிங் காட்சியை வெட்டி பயன்படுத்திக் கொண்டனர்.
Bullitt திரைப்படத்தில் அன்றைய பிரபல ஹாலிவுட் நடிகர் ஸ்டீவ் மெக் குயின் நாயகனாக நடித்தார். 4 மில்லியன் டாலாரில் எடுக்கப்பட்ட இப்படம் 42 மில்லியன் டாலர்களை வசூலித்ததுடன், சிறந்த எடிட்டிங்கிற்கான ஆஸ்கர் விருதையும் வென்றது. படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது. சான்பிரான்சிஸ்கோவில் எடுக்கப்பட்ட கார் சேஸிங் காட்சி.