ரோபோ சங்கரின் திருமண நாளை முன்னிட்டு, ஜெயிலர் படப்பிடிப்பில் அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். அவருடன் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு மற்றும் சிவராஜ்குமார் ஆகியோரும் நடித்து வருகிறார்கள். ஜெயிலர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் ரோபோ சங்கர் தனது திருமண நாளை கொண்டாடினார். இதையடுத்து ரோபோ சங்கர் குடும்பத்தை நேரில் அழைத்து வாழ்த்து கூறினார் ரஜினிகாந்த். அதோடு சில ரசிகர்களையும் சந்தித்து, அவர்களுடன் படம் எடுத்துக் கொண்டார் ரஜினி. அந்தப் படங்கள் தற்போது இணையத்தில் வலம் வருகின்றன.