ரஜினி நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான பாபா டிசம்பர் 10 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. பாபா ரீ ரிலீஸ் ஆகும் நிலையில் ‘பாபா’ திரைப்படம் ரஜினியின் வெற்றி படமா? தோல்வி படமா? என்ற இணையத்தில் விவாதித்து வருகின்றனர். பாபா திரைப்படம் ரிலீஸானபோது 107 திரையரங்குகளில் 50 நாட்களும், 8 திரையரங்குகளில் 100 நாட்களும் ஓடியுள்ளது. பாபா அந்த காலகட்டத்தில் வெற்றி படம் தான். ஆனால் வசூலை விட அதிக தொகைக்கு படத்தை விற்பனை செய்ததால் பலருக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாபா திரைப்படம் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு புதிய கிளைமேக்ஸுடன் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. பழைய பாபா படத்தை விட புதிய வெர்ஷன் ரசிகர்களை கவர்ந்துள்ளது. புதிய கிளைமேக்ஸ் ரசிகர்களுக்கு பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸான பாபா உலகம் முழுவதும் முதல் நாள் மட்டும் ரூ.80 லட்சத்திற்கும் மேல் வசூலித்துள்ளது.