முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » அண்ணாவின் வசனத்தில் கிடைத்த படத்தலைப்பு.. ரீமேக்கில் நடித்த ரஜினி.. ட்ரெண்ட் செட் செய்த விஜயகாந்த்!

அண்ணாவின் வசனத்தில் கிடைத்த படத்தலைப்பு.. ரீமேக்கில் நடித்த ரஜினி.. ட்ரெண்ட் செட் செய்த விஜயகாந்த்!

இந்தப் படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி, மாதவி, லட்சுமியை வைத்தும், கன்னடத்தில் சங்கர் நாக், ஆராத்தியை வைத்தும் எஸ்.ஏ.சந்திரசேகரன் ரீமேக் செய்தார். மலையாளத்திலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் அந்தா கானூன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்தார். உடன் ஹேமாமாலினி, ரீனா ராய் நடித்தனர்.

  • 16

    அண்ணாவின் வசனத்தில் கிடைத்த படத்தலைப்பு.. ரீமேக்கில் நடித்த ரஜினி.. ட்ரெண்ட் செட் செய்த விஜயகாந்த்!

    1979 இல் இனிக்கும் இளமையில் அறிமுகமான விஜயகாந்த் அகல் விளக்கு, நீரோட்டம், சாமந்திப்பூ என சில படங்களில் நடித்த பின், 1980 இல் தூரத்து இடிமுழக்கத்தில் நாயகனானார். இந்தப் படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. அதேநேரம் எஸ்.ஏ.சந்திரசேகரன் அவள் ஒரு பச்சைக் குழந்தை என்ற தோல்விப் படத்தை இயக்கி வெற்றிக்காக காத்திருந்தார். இவர்கள் இருவரும் இணைந்து 1981 இல் ஒரு படம் செய்கிறார்கள். இயக்குனராக எஸ்.ஏ.சந்திரேசகரனுக்கு அது இரண்டாவது படம். கதாநாயகனாக விஜயகாந்துக்கும் அது இரண்டாவது படம். அந்தப் படம் வெற்றி பெற்றால் அதுதான் இருவருக்குமே முதல் வெற்றி. அதுதான், 100 நாள்களுக்கு மேல் ஓடிய, மலையாளம், தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட சட்டம் ஒரு இருட்டறை.

    MORE
    GALLERIES

  • 26

    அண்ணாவின் வசனத்தில் கிடைத்த படத்தலைப்பு.. ரீமேக்கில் நடித்த ரஜினி.. ட்ரெண்ட் செட் செய்த விஜயகாந்த்!

    1949 இல் வெளிவந்த வேலைக்காரி திரைப்படத்தில், 'சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு, ஆனால் அது ஏழைக்கு எட்டாத விளக்கு' என்று அண்ணா வசனம் எழுதியிருப்பார். அதிலிருந்துதான் சட்டம் ஒரு இருட்டறை என்ற தலைப்பை எஸ்.ஏ.சந்திரசேகரன் தேர்வு செய்தார். 20 க்கும் மேற்பட்டவர்கள் இந்தக் கதையை நிராகரித்த பின், வடலூர் எஸ்.சிதம்பரம் இந்த கதையை தயாரிக்க முன்வந்தார்.

    MORE
    GALLERIES

  • 36

    அண்ணாவின் வசனத்தில் கிடைத்த படத்தலைப்பு.. ரீமேக்கில் நடித்த ரஜினி.. ட்ரெண்ட் செட் செய்த விஜயகாந்த்!

    மூன்று கிரிமினல்கள் சேர்ந்து ஒருவரை கொலை செய்கிறார்கள். இதனைப் பார்ப்பவர் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல, மூவருக்கும் சிறைத்தண்டனை கிடைக்கிறது. அவர்கள் சிறையிலிருந்து தப்பித்து வந்து சாட்சி சொன்னவரைக் கொன்று, அவரது மூத்த மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்கிறார்கள். இதனை அவரது மனைவி, இன்னொரு மகள் மற்றும் சிறுவனான மகன் ஆகியோர் கண்ணெதிரேயே செய்கிறார்கள். மூவரும் இதுபற்றி காவல்நிலையத்தில் புகார் செய்கிறார்கள். அவர்கள் சொல்லும் மூவரும் அந்த நேரத்தில் சிறையில் இருந்ததாகக்கூறி வழக்குப் பதிய மறுக்கிறார்கள். மூவருக்கும் சட்டம் மறுக்கப்படுகிறது. அந்த சிறுவன் பழிவாங்கும் உணர்ச்சியுடன் வளர்கிறான். அவர்கள் எப்படி சட்டத்தை வளைத்து தனது தந்தையையும், சகோதரியையும் கொலை செய்தார்களோ அப்படி அவர்களை கொலை செய்ய நினைக்கிறான். போலீஸ் அதிகாரியாகும் அவனது சகோதரி, சட்டப்படி அவர்களை தண்டிக்க நினைக்கிறாள். நாயகனின் பழிவாங்கலுக்கு அவளே தடையாக இருக்கிறாள். சட்டம் ஜெயித்ததா இல்லை நாயகனின் சட்டத்தை மீறிய பழிவாங்கல் ஜெயித்ததா என்பதை சுவைபட கூறியிருந்தார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

    MORE
    GALLERIES

  • 46

    அண்ணாவின் வசனத்தில் கிடைத்த படத்தலைப்பு.. ரீமேக்கில் நடித்த ரஜினி.. ட்ரெண்ட் செட் செய்த விஜயகாந்த்!

    விஜயகாந்தின் கதாபாத்திரத்திற்கு விஜய் என பெயர் வைத்திருந்தார் எஸ்.ஏ.சந்திரசேகரன். இதன் கதையை எழுதியவர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகரன். பூர்ணிமா தேவி நாயகியாகவும், வசுமதி போலீஸ் அதிகாரியாகவும் நடித்தனர். மூன்று வில்லன்களில் முதன்மை வில்லனாக சங்கிலி முருகன் நடித்திருந்தார். வில்லன்களைப் போலவே சட்டத்தின் கண்ணில் மண்ணைத்தூவி விஜயகாந்த் மூவரையும் கொலை செய்யும் காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டிருந்தன. வழக்கமான பழிவாங்கலில் இருந்து மாறுபட்டு, சட்டத்தின் நிழலில் நடத்தப்பட்ட இந்த பழிவாங்கல் ரசிகர்களுக்குப் பிடித்துப்போக, படம் 100 நாள்களுக்கு மேல் ஓடிவிஜயகாந்த், எஸ்.ஏ.சந்திரசேகரன் இருவரது திரைவாழ்க்கையையும் புரட்டிப் போட்டது.

    MORE
    GALLERIES

  • 56

    அண்ணாவின் வசனத்தில் கிடைத்த படத்தலைப்பு.. ரீமேக்கில் நடித்த ரஜினி.. ட்ரெண்ட் செட் செய்த விஜயகாந்த்!

    இந்தப் படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி, மாதவி, லட்சுமியை வைத்தும், கன்னடத்தில் சங்கர் நாக், ஆராத்தியை வைத்தும் எஸ்.ஏ.சந்திரசேகரன் ரீமேக் செய்தார். மலையாளத்திலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் அந்தா கானூன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்தார். உடன் ஹேமாமாலினி, ரீனா ராய் நடித்தனர்.

    MORE
    GALLERIES

  • 66

    அண்ணாவின் வசனத்தில் கிடைத்த படத்தலைப்பு.. ரீமேக்கில் நடித்த ரஜினி.. ட்ரெண்ட் செட் செய்த விஜயகாந்த்!

    சட்டம் ஒரு இருட்டறை திரைப்படத்தை ஒரு ட்ரெண்ட் செட்டர் என்று சொல்லலாம். இந்தப் படத்திற்குப் பின் இதே சாயலில் நிறைய கதைகள் திரைப்படங்களாயின. அத்துடன் இதுவொரு எவர்கிரீன் ஃபார்முலாவாகவும் இருந்து வருகிறது. 1981, பிப்ரவரி 14 வெளியான சட்டம் ஒரு இருட்டறை இன்று 42 வது வருட நிறைவை கொண்டாடுகிறது.

    MORE
    GALLERIES