ஆர்ஆர்ஆர் படத்தின் மூன்றாவது பாடலை வெளியிடுவதற்காக ராஜமௌலி வந்திருந்தார். பிவிஆர் சினிமாஸில் இதற்கான விழா நடந்தது.
2/ 9
விழாவுக்கு ராஜமௌலி வெள்ளைச் சட்டையில் வந்திருந்தார். படத்தின் தமிழக உரிமையை வாங்கியிருக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆர்ஆர்ஆர் என பெயர் பொறித்த சிவப்புச் சட்டை அளிக்கப்பட்டது. அதனை மறுப்பு சொல்லாமல் அணிந்து கொண்டார் ராஜமௌலி.
3/ 9
உங்களை சந்திப்பதற்கு நீண்ட நாள்கள் எடுத்துக் கொண்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். படம் வெளியாகும் முன் ப்ரீ ரிலீஸ் பங்ஷனுக்காக அனைத்து நட்சத்திரங்களுடன் சென்னையில் பிரமாண்ட நிகழ்வில் உங்களை சந்திப்பேன் என்றார் ராஜமௌலி.
4/ 9
முன்னதாக லைகா புரொடக்ஷன்ஸ் தமிழக பொறுப்பாளர் தமிழ்க்குமரன் ராஜமௌலிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
5/ 9
தமிழ்க்குமரன் பேசுகையில், ஆர்ஆர்ஆர் பிரமாண்மான படம். இது நட்புரீதியிலான சங்கமம். இன்னும் பல படைப்புகளில் இது தொடரும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
6/ 9
ஆர்ஆர்ஆர் படத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கான், அலியாபட், சமுத்திரகனி உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர்.
7/ 9
2022 ஜனவரி 7 படம் வெளியாவதற்கு முன் படத்தில் நடித்த முன்னணி நட்சத்திரங்களுடன் சென்னையில் பிரமாண்ட விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் இதற்கான ஏற்பாட்டை செய்கிறது.
8/ 9
சென்னையில் நடந்த நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான தானய்யாவும் கலந்து கொண்டார். இது எங்களுக்கு முக்கியமான படைப்பு. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்றார்.
9/ 9
ஆர்ஆர்ஆர் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை பெற்றிருக்கும் லைகா , படத்தை மிகப்பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளது.