இதற்காக நடிப்ப்பதை அவர் நிறுத்த போவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ராதிகா ஆப்தே அளித்துள்ள பேட்டியில், இயக்குனராக வேண்டும் என முதலில் இருந்தே எனக்கு ஆசை உள்ளது. ஆனால் எதிர்பாராமல் நடிகையாகி விட்டேன். அது மட்டுமின்றி நான் ஏற்கனவே இயக்குனர் பிரிவில் பயிற்சியும் பெற்றிருக்கிறேன். விரைவில் ஒரு படத்தை இயக்க போகிறேன். என்றார்.
மேலும் அதற்கு முன்பு திரைக் கதை பற்றி இன்னும் கொஞ்சம் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக சில இயக்குனர்களிடம் பணியாற்றி பயிற்சி பெற முடிவு செய்திருக்கிறேன். திரைக்கதைகளைகூட தயார் செய்து கொண்டிருக்கிறேன். இயக்குனர் ஆனாலும் நடிப்பில் இருந்து விலக மாட்டேன். நடிப்புக்குத்தான் எப்போதும் முன்னுரிமை கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.