ஹரி இயக்கத்தில் யானை படத்தில் நடித்து வந்தார் ராதிகா சரத்குமார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்ததால் அவர் படக்குழுவிடமிருந்து விடை பெற்றுக் கொண்டார்.
2/ 8
ஹரியின் யானையில் அருண் விஜய் நாயகனாக நடிக்கிறார். ப்ரியா பவானி சங்கர் நாயகி. ராதிகா, யோகி பாபு, சமுத்திரகனி உள்பட பலர் நடிக்கின்றனர்.
3/ 8
இதன் படப்பிடிப்பு ராமேஸ்வரம், தூத்துக்குடி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் நடந்து வந்தது. ராதிகா சம்பந்தப்பட்ட காட்சிகளை காரைக்குடியில் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
4/ 8
ராதிகாவின் பிறந்தநாளின் போது யானை படக்குழு கேக் வரவழைத்து ராதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்தது.
5/ 8
தற்போது ராதிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்த நிலையில், அவர் படக்குழுவிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார்.
6/ 8
முன்னதாக படத்தின் நாயகி ப்ரியா பவானி சங்கர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
7/ 8
அதேபோல் படப்பிடிப்புக்கு வந்த ஹரியின் மனைவி ப்ரீத்தா விஜயகுமாரும் ராதிகாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
8/ 8
அடுத்த வருட ஆரம்பத்தில் யானையை திரைக்கு கொண்டுவர ஹரி திட்டமிட்டுள்ளார்.