விஜய் நடிப்பில், வம்ஷி இயக்கத்தில் வாரிசு படம் பொங்கலுக்கு வெளியானது. இதில் சரத்குமார், பிரபு, ஷாம், சம்யுக்தா, சங்கீதா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். வாரிசு படத்திற்கு இசையமைப்பாளர் எஸ்.தமன் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே என்ற பாடலை பாடியிருந்தார் விஜய். வாரிசு படம் 7 நாட்களில் 210 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது இந்நிலையில் வாரிசு படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் நடந்துள்ளது. அதில் எடுத்துக் கொண்ட படங்களை நடிகை ராதிகா சரத்குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.