‘எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’ உள்ளிட்ட படங்கிய எம்.சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடித்திருக்கும் படம் ‘ராங்கி’. ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சி.சத்யா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். . இதில் த்ரிஷா இணையதள செய்தியாளராக நடித்திருக்கிறார். அதிலும் ஆக்ஷன் பார்முலாவில் எடுத்துள்ளனர். இந்தப் படம் நாளை டிசம்பர் 30-ம் தேதி வெளியாகவுள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னனி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் டிரைவர் ஜமுனா. இந்த திரைப்படத்தை 'வத்திக்குச்சி' படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார். தயாரிப்பாளர் எஸ் பி சவுத்ரி இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் நாளை டிசம்பர் 30-ம் தேதி வெளியாகவுள்ளது.
கும்கி, மைனா முதலான படங்களை இயக்கியுள்ள பிரபு சாலமன் இயக்கத்தில் ‘செம்பி’ உருவாகியுள்ளது. இதில் கோவை சரளா முன்னனி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் இவருடன் தம்பி ராமையா, அஷ்வின் குமார், கு.ஞானசம்பந்தம் என பலர் நடித்துள்ளனர். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் என்டர்டெயின்மெண்ட் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன. இந்தப் படம் நாளை டிசம்பர் 30-ம் தேதி வெளியாகவுள்ளது.
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் சன்னி லியோன். இவர் கடந்த 2012-ஆம் ஆண்டில் இருந்து இந்தி படங்களில் நடித்து வருகிறார். பல படங்களில் இடம்பெறும் சிங்கிள் பாடலுக்கு சன்னி லியோன் ஆட்டம்போட்டு ரசிர்களை ஈர்த்த அவர் ஓ மை கோஸ்ட் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்துள்ளார். இந்தப் படத்தில் ஓ மை கோஸ்ட் படத்தில் தர்ஷா குப்தா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, ஜி.பி.முத்து என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை டிசம்பர் 30-ம் தேதி வெளியாகவுள்ளது.