அந்த வகையில் சுருதிஹாசனிடம் வயதான நடிகர்களுடன் நடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சுருதிஹாசன், “நடிப்பு துறையில் வயது என்பது ஒரு நம்பர் மட்டுமே. நடிக்கும் திறமை இருந்தால் உயிரோடு இருக்கும் வரை நடிக்கலாம். இதை ஏற்கனவே பல வயதான ஹீரோக்கள் தங்களை விட இரண்டுமடங்கு வயது குறைவான இளம் கதாநாயகிகளுடன் நடித்து நிரூபித்து இருக்கிறார்கள். இதற்கு நான் ஒன்றும் விதிவிலக்கு அல்ல” என்று கூறியுள்ளார்.