அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் படம் சாணிக்காயிதம். அதீத வன்முறைக் காட்சிகள் நிறைந்த படம் என்பதால் திரையரங்கில் இந்தப் படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2/ 7
அருண் மாதேஸ்வரன் தியாகராஜன் குமாரராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இவரது முதல் படம் ராக்கி. தரமணி நாயகன் வசந்த் ரவி பிரதான வேடத்தில் நடிக்க, பாரதிராஜா உள்பட பலரும் நடித்திருந்தனர்.
3/ 7
இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ராக்கியின் ஹைலைட், அதன் ரத்தம் தெறிக்கும் வன்முறை. படத்தை விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் வாங்கியது. என்ன காரணம் தெரியவில்லை, இன்னும் படத்தை வெளியிடாமல் வைத்திருக்கிறார்கள்.
4/ 7
ராக்கிக்குப் பிறகு அருண் மாதேஸ்வரன் இயக்கிய படம் சாணிக்காயிதம். செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் சில வாரங்கள் முன் முடிவடைந்தன.
5/ 7
போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்தப் படத்திலும் வன்முறைக்காட்சிகள் ஏராளம் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
6/ 7
முக்கியமாக கீர்த்தி சுரேஷை பலபேர் பாலியல் பலாத்காரம் செய்யும் காட்சி. பண்டிட் குயினில் வரும் பாலியல் வன்முறைக் காட்சிக்கு இணையாக இதனை எடுத்திருப்பதாக கூறுகின்றனர்.
7/ 7
இந்த காரணங்களால் சாணிக்காயிதம் திரையரங்கில் வெளிவருமா இல்லை நேரடியாக ஓடிடியில் வெளியாகுமா என கோடம்பாக்கத்தில் சந்தேகம் கிளப்புகின்றனர். படம் சென்சாருக்குப் போகும் போது இதற்கான பதில் தெரிந்துவிடும்.