சமூக வலைதளங்களில் பணத்துக்காகத்தான் நடிக்க வந்தேன் என பிரியா பவானி ஷங்கர் பேசியதாக செய்திகள் வெளியானது.
2/ 10
மேலும் சினிமாவிற்கு வரும்போது ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா, இல்லையா என்றும் கவலைப்படவில்லை. நடித்தால் பணம் வருகிறது என்று நினைத்தேன். அதற்காகவே நடித்தேன் என்றும் அவர் பேசியதாக கூறப்படுகிறது.
3/ 10
தமிழில் நடிக்க வந்தபோது எனக்கு எதிர்காலத்தைப் பற்றிய பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை என்று அவர் பேசியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
4/ 10
இந்த நிலையில் பணத்துக்காகத்தான் நடிக்க வந்தேன் என பிரியா பவானி ஷங்கர் பேசியதாக சமூக வலைதளங்களில் சர்ச்சை உருவானது.
5/ 10
இந்த நிலையில் இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் அளித்துள்ள விளக்கத்தில் பிரயா பவானி ஷங்கர் குறிப்பிட்டுள்ளதாவது, ''மாப்ள சொம்பு கொடுத்தா தான் தாலி கட்டுவாறாம் என்ற மோடில் ஊடகத்தினர் இருக்கின்றனர்.''
6/ 10
''என்னுடைய கருத்து என்று கூறப்படும் இந்த தகவலுக்கு ஆதாரம் என்ன என்பதை தெரிந்து கொள்ளவிரும்புகிறேன். துவக்கத்தில் இதற்கு ரியாக்ட் செய்ய வேண்டாம் என நினைத்தேன். எந்த வித நம்பகத்தன்மையும் இல்லாமல் வெறும் சுவாரசியத்துக்காக இது பதிவிட்பட்டுவருகிறது. ''
7/ 10
''நான் இப்படி சொல்லவில்லை. ஒருவேளை நான் சொல்லியிருந்தாலும் அதில் என்ன தவறு இருக்கிறது என எனக்கு புரியவில்லை. ஆம் நான் பணத்துக்காகத் தான் வேலை செய்கிறேன். எல்லோரும் பணத்துக்காகத்தான் வேலை செய்கின்றனர். ''
8/ 10
''ஒரு நடிகரிடம் இருந்து கருத்துகள் வெளிப்படும்போது மட்டும் ஏன் இப்படி தரக்குறைவாக பார்க்கப்படுகிறது என்று தெரியவில்லை. ''
9/ 10
''ஒருவரை மதிப்பிழக்க செய்யும் நோக்கில் இப்படியான வேலைகளை செய்யாதிருப்போம். ''
10/ 10
''என் வழியில் நான் வேலை செய்துகொண்டிருக்கிறேன். அதனை யாரையும் இலகுவாகவும் தரக்குறைவாகவும் எடுத்துக்கொள்ள விடமாட்டேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.