இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறிய கதையை மாஸ் ஹீரோ ஒருவர் நிராகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் சினிமாவில் இளம் இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இரண்டாவது படத்திலேயே நடிகர் கார்த்தியை இயக்கினார். அந்தப் படம் ரிலீஸாவதற்கு முன்பே நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஒப்பந்தமானார். மாஸ்டர் படம் வெளியாகி பாஸிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றதோடு, வசூலையும் குவித்தது. தற்போது நடிகர் கமல் ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவும் நடித்துள்ளார். இந்நிலையில் தெலுங்கு நடிகர் பிரபாஸிடம் லோகேஷ் கனகராஜ் ஒரு கதை சொன்னதாகவும் ஆனால் அவருக்கு அது பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. கதையைக் கேட்ட பிரபாஸ் வழக்கமான கதையாக இருப்பதாகவும், வேறு எதும் பிரமாண்டமான கதை இருந்தால் பேசலாம் என சொன்னதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.