ரிச்சா கங்கோபாத்யாய் :
ரிச்சா என்றதும் எல்லோருக்கும் சட்டென நினைவுக்கு வருவது மயக்கம் என்ன படம் தான். அந்தப் படம் பார்த்தவர்கள் யாமினி மாதிரி ஒரு மனைவி கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என உருகினார்கள். பின்னர் சிம்புவுக்கு ஜோடியாக ஒஸ்தி படத்தில் நடித்தார். தமிழ் மட்டுமல்லால் தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போதே நான் எம்பிஏ படிக்க வேண்டும் என பாதியில் விலகினார்.
அப்பாஸ்
90களில் லவ்வர் பாயாக வலம் வந்தவர் அப்பாஸ். காதல் தேசம் படத்தில் அறிமுகமானவர் மின்னலே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ரஜினிகாந்த்தின் படையப்பா, கமலின் பம்மல் கே. சம்மந்தம் ஆகிய படங்களல் சிறப்பு வேடங்களில் நடித்திருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் ராமானுஜம் என்ற படம் வெளியாகியிருந்தது. திடீரென படங்களில் நடிப்பதிலிருந்து விலகிய அப்பாஸ் நியூசிலாந்தில் செட்டிலானார்.
சிவகுமார்
1965 ஆம் ஆண்டு திரையுலகில் அடியெடுத்து வைத்த சிவகுமார் பல படங்களில் ஹீரோவாக நடித்தார். பின்னர் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்தார். 190 படங்களில் நடித்துள்ள அவர், சித்தி, அண்ணாமலை போன்ற சின்னத்திரை தொடர்களிலும் கலக்கினார். கடைசியாக அஜித் - ஜோதிகா நடித்த பூவெல்லாம் உன் வாசம் படத்தில் நடித்திருந்த அவர் திடீரென படங்களில் நடிப்பதிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
கல்யாணி
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அடியெடுத்துவைத்த கல்யாணி, அள்ளித்தந்த வானம், ஜெயம் போன்ற படங்களில் நடித்தார். பின்னர் ஹீரோயினாகவும் திடீரென படங்களில் நடிப்பதை நிறுத்தினார். திரைப்படங்களில் நடிக்கும்போது பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டதாக பேட்டி ஒன்றில் கல்யாணி பேசியது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. திருமணத்துக்கு பிறகு தற்போது பெங்களூரில் வசித்துவருகிறார்.
அசின்:
அஜித், விஜய், சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவந்தவர் அசின். கஜினி படம் அமீர்கான் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்ட நிலையில் தமிழில் தான் செய்த வேடத்தை ஹிந்தியிலும் ஏற்று நடித்தார். ஹிந்தியில் அந்தப் படம் பெரிய வெற்றிபெற தொடர்ந்து ஹிந்தியில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். ஹிந்தியில் அக்ஷய் குமார், சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்துவந்த அவர் ராகுல் சர்மா என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து விலகினார்.