சினிமாவில் நடிப்பதற்கு முன்பு நடிகை பூஜா ஹெக்டே எப்படி இருந்தார் என்பதை அறிந்துக் கொள்ளும் விதமாக அவரது அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இயக்குநர் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. ஆனால் அந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறாததால், தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்தார் பூஜா. அதன் பிறகு விஜய்யின் பீஸ்ட் படத்தில் ஒப்பந்தமாகி அனைவரது கவனத்தையும் தன் மீது திருப்பினார். தமிழில் இரண்டாவதாக பூஜா ஹெக்டே நடித்த பீஸ்ட் படமும் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. ஆனால் பாடல்களும். அதில் விஜய் பூஜாவின் நடனமும் ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டின. சமீபத்தில் கான் திரைப்பட விழாவில் கலந்துக் கொண்ட பூஜா, அந்தப் படங்களை இஸ்டகிராமில் பகிர்ந்திருந்தார். அவைகள் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தன. இந்நிலையில் நடிக்க வருவதற்கு முன்பு பூஜா ஹெக்டே எப்படி இருந்தார் என்பதை அறிந்துக் கொள்ளும் வகையில் அவரது புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது, அந்த புகைப்படம் இது தான்.