

பூஜா ஹெக்டே நடிகை சமந்தாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ட்விட்டரில் ட்ரெண்டாக்கியுள்ளனர் ரசிகர்கள்.


முகமூடி படத்தில் நடித்திருந்த நடிகை பூஜா ஹெக்டே, தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.


பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் பதிவில், சமந்தா அவ்வளவு அழகாக ஒன்றும் இல்லை என பதிவிடப்பட்டிருந்ததால் ரசிகர்கள் கோபமடைந்தனர்.


இதையடுத்து பூஜா இப்படி கூறியதற்காக அவர் சமந்தாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டாக்கினர் ரசிகர்கள்.


இதனிடையே தனது இன்ஸ்டாகிராம் முடக்கப்பட்டிருப்பதாக பூஜா ஹெக்டே ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், “எனது இன்ஸ்டாகிராம் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டனர். கடந்த சில மணிநேரங்களில் வந்த பதிவுகளை தவிர்த்துவிடுங்கள்” என்றும் சில மணி நேரத்தில் தனது அடுத்த பதிவில் முடக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கை தனது டெக்னிக்கல் டீம் மீட்டு சரிசெய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.


பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டதாக காரணம் கூறினாலும் சமந்தாவின் ரசிகர்கள் அவரை விட்டபாடில்லை.