நடிகை பூஜா ஹெக்டே தனது லேட்டஸ்ட் படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார். மிஷ்கினின் முகமூடி படத்தில் அறிமுகமானார் பூஜா ஹெக்டே. அந்தப் படத்தின் மிகப்பெரிய மைனஸ், நாயகியாக நடித்த பூஜா ஹெக்டே என பலரும் குறிப்பிட்டனர். அதோடு தமிழில் காணாமல் போனார். ஆனால், தெலுங்கு அவரை அரவணைத்தது. துவ்வாடு ஜெகன்நாதம், மகரிஷி, அல வைகுந்தபுரமலு என முக்கியமான படங்களில் நடித்தார். இந்தியில் மொகஞ்சதாரோ, ஹவுஸ்ஃபுல் 4 படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து இந்தி, தெலுங்கின் முன்னணி நடிகையானார். தமிழில் கடைசியாக விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்திருந்த அவர், தற்போது இந்தியில் ரன்வீர் சிங்குடன் இணைந்து சர்க்கஸ் படத்தில் நடித்துள்ளார். அதன் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் பிஸியாக இருக்கும் பூஜா தனது லேட்டஸ்ட் படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.