பலரின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ளார். கார்த்தி வந்தியதேவனாகவும், ஜெயம் ரவி அருள்மொழி வர்மனாகவும் நடித்துள்ளனர். ஐஸ்வர்யா ராய் நந்தினி என்ற பழிவாங்கும் வேடத்திலும், த்ரிஷா குந்தவையாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜெயராம், பிரகாஷ்ராஜ், ரஹ்மான், பிரபு, சரத்குமார் உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர்களின் கதாபாத்திர போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசரைப் பார்த்த ரசிகர்கள் பிரமாண்டத்தின் உச்சமாய், தமிழ் சினிமா வரலாற்றில் பொன்னியின் செல்வன் படத்துக்கு தனியிடம் இருக்கும் என்கிறார்கள். இரண்டு பாகமாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது. டீசரில், ஐஸ்வர்யாவும் - த்ரிஷாவும் சந்தித்துக் கொள்ளும் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.