இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான படம் 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக உருவான இப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது. இதில் விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஜெயராம், விக்ரம் பிரபு, கிஷோர், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் தற்போது தமிழகத்தில் ரூ.100 கோடி வசூலித்து, 2022-ல் தமிழகத்தில் 100 கோடி வசூலித்த படங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அந்தப் பட்டியலை இங்கே பதிவிடுகிறோம்.