நாடு முழுவதும் பொங்கல் கொண்டாட்டம் களைக்கட்டி வரும் நிலையில் திரைப்பிரபலங்கள் பல பேர் பட்டாடை கட்டி பாரம்பரிய உடை அணிந்து கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தமிழில் முண்ணனி கதாநாயகியான நடிகை கீர்த்தி சுரேஷ் மஞ்சளும் ஆரஞ்சும் கலந்த மஸ்டர்ட் நிற பட்டு புடவையில் தன் குடும்பத்தார் நண்பர்கள் மற்றும் அவரது செல்லப்பிராணியுடன் சேர்ந்து பொங்கல் வைக்கும் கியூட் ஃபோட்டோஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதை ரசிகர்கள் பலர் கமெண்டுகளில் அவர்களது அன்பை வெளிகாட்டி வருகின்றனர்.