தமிழில் மீண்டும் எப்போது நடிப்பீர்கள் என்ற கேள்விக்கு நடிகை பியா பாஜ்பாய் அதிர்ச்சியான பதிலைக் கொடுத்துள்ளார். உத்திரப்பிரதேசத்தில் பிறந்து டெல்லியில் வசிப்பவர் நடிகை பியா பாஜ்பாஜ். பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் விளம்பரப் படத்தில் நடித்த பின், அவரது தயாரிப்பில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து ஏ.எல் விஜய் இயக்கிய பொய் சொல்லப் போறோம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் பியா. அடுத்து அஜித்துடன் ஏகன் படத்தில் நடித்தார். பின்னர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோவா படத்தில் ஹீரோயினாக நடித்தார் பியா. பின்னர் பலே பாண்டியா, கோ உள்ளிட்ட படங்களில் நடித்தார். குறிப்பாக கோ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்தார். கடந்த 5 ஆண்டுகளாக தமிழில் நடிக்காமல் இருக்கும் பியாவிடம், எப்போது மீண்டும் தமிழில் நடிப்பீர்கள் என நெட்டிசன் ஒருவர் ட்விட்டரில் கேட்டார். அதற்கு, ’உண்மையில் அதுகுறித்த ஐடியா இல்லை’ என்று அதிர்ச்சியான பதிலைக் கூறியிருக்கிறார் பியா.