சமந்தாவின் தெறி லுக்கை ரீகிரியேட் செய்து, அவரிடமே பாராட்டு வாங்கிய பவித்ரா லட்சுமி, தனது லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட்டில் சமந்தாவின் ஜெராக்ஸ் போல தெரிகிறார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை பவித்ரா லட்சுமி. மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் சினிமா நடிகையானார். பின்னர் சதீஷுடன் இணைந்து நாய் சேகர் படத்தில் நடித்தார். பின்னர் தமிழ் - மலையாளத்தில் வெளியான யுகி படத்தில் நடித்தார் பவித்ரா லட்சுமி. இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவருக்கு அதில் 21 லட்சத்துக்கும் மேல் ஃபாலோயர்கள் உள்ளனர். இந்நிலையில் தனது லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட்டில் சமந்தாவின் ஜெராக்ஸ் போல காட்சியளிக்கிறார் பவித்ரா.