#MeToo இயக்கம் இந்தியாவை அடைவதற்கு முன்பே, 2017-ஆம் ஆண்டு ஒரு பெண் நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்குப் பிறகு, பார்வதியும் அவரது சகாக்களும் திரைப்படத் துறையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிகளை முன்னெடுத்தனர். பெண்கள் வெளியில் வந்து பேசுவதற்கும், தவறான உறவுகளுடனான தங்களது போராட்டங்களை சரிசெய்யவும், நச்சுத்தன்மையுள்ள ஆண்களை இயல்பாக்குவதில் சினிமா வகிக்கும் பங்கை அதிகப்படுத்துவதிலும் அதிகம் மெனக்கெட்டார் பார்வதி.
பெங்களூரு நகரின் கலாச்சாரத்தில் அஞ்சலி மேனன் இயக்கிய காதல் படம் பெங்களூர் டேஸ். இதில் பார்வதி, சாரா என்ற பிரபலமான ரேடியோ ஜாக்கியாக நடித்திருந்தார். சாரா சக்கர நாற்காலியில் மட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம், ஆனால் அவளது வாழ்க்கையை தனக்குப் பிடித்தபடி வாழ அவளது உயிருக்கு எல்லையே இல்லை. மாற்றுத்திறனாளியான சாரா எந்த இடத்திலும் தன்னை கசப்பான நபராக உணரவில்லை. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பெங்களூர் டேஸ் படத்தைப் பார்க்கலாம்.
பார்வதியின் கேரியரை டேக் ஆஃப் படத்துக்கு முன்பு அதற்குப் பின்பு என இரண்டாக பிரிக்கலாம். நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணான சமீராவாக, பார்வதி ஒரு சக்திவாய்ந்த நடிப்பை வெளிப்படுத்திய பிறகு, அவரது தொழில் வாழ்க்கையும் புகழும் உண்மையில் மற்றொரு நிலையை எட்டியது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் டேக் ஆஃப் படத்தைப் பார்க்கலாம்.
பார்வதியின் கேரியரில் உயரே மற்றொரு மைல்கல் படம். பார்வதி நடித்த பல்லவி ரவீந்திரன் கதாபாத்திரத்தின் காதலன் தனது முகத்தில் ஆசிட் வீசியதும், கமர்ஷியல் பைலட் ஆக வேண்டும் என்ற கனவு கேள்விக்குறியாகும். ஆசிட் தாக்குதலில் உயிர் பிழைத்தவராக, தாக்குதலுக்குப் பின் ஏற்படும் அதிர்ச்சியை, பாதிப்பை ஏற்படுத்தும் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் பார்வதி. உயரே படத்தை நெட்ஃபிளிக்ஸில் பார்க்கலாம்.