பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா தனுஷ், அடிக்கடி தனது விதவிதமான படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துக் கொள்கிறார். நடிகை சுஜிதா குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பல நடிகைகளுக்கு டப்பிங்கும் பேசியுள்ளார். அதோடு தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கில் எண்ணற்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சுஜிதா. அதோடு கதை கேளு கதை கேளு என்ற யூ-ட்யூப் சேனலையும் நடத்தி வருகிறார். குழந்தைப்பருவம் முதல் சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் நடிகையாக வலம் வரும் சுஜிதா தனுஷ், சமீபத்தில் இயக்குனராகவும் மாறினார். ஆம் பிரபல நிறுவனம் ஒன்றிற்கு ஹன்சிகாவை வைத்து விளம்பர படத்தை இயக்கினார். அந்த வீடியோவை இன்ஸ்டகிராமிலும் வெளியிட்டிருந்தார். அதோடு இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருக்கும் சுஜிதா, தனது படங்களை தவறாமல் பகிர்ந்துக் கொள்கிறார்.