அவர் அந்த பதிவேட்டில் "2023-ல் மதப் பாகுபாடு இன்னும் நிலவுவது வருத்தமும் ஏமாற்றமும் அளிக்கிறது. என்னால் கடவுளின் அருகில் செல்ல முடியவில்லை இருந்தாலும் தூரமாக நின்று அருளை பெறமுடிந்தது. விரைவில் மதப் பாகுபாடு போன்ற எண்ணங்களில் இருந்து மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன். கூடிய விரைவில் நாம் அனைவரும் மதத்தின் அடிப்படையில் அல்லாமல் , சமமாக நடத்தப்படும் நேரம் வரும்" என்று எழுதியுள்ளார்.
இந்த செய்தி வைரலானதை அடுத்து கோவில் நிர்வாகத்தினர் பதில் அளித்துள்ளனர். திருவைராணிகுளம் மகாதேவர் கோயிலின் அறக்கட்டளை செயலர் கூறுகையில், இதற்கு முன்னரும் பிற மதத்தினரும் வந்து சாமி தரிசனம் செய்ததுள்ளனர்.இருப்பினும், ஒரு பிரபலம் வந்தால், அது சர்ச்சையாகி விடுகிறது.நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள நெறிமுறைகளை மட்டுமே தாங்கள் பின்பற்றி வருவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.