நடிகர் ஆதியும் நடிகை நிக்கி கல்ராணியும் வரும் மே 18-ம் தேதி திருமணம் செய்துக் கொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2/ 8
மார்ச் மாதம் நெருக்கமான உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்ட ஆதி பினிசெட்டி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் மே 18-ம் தேதி திருமணம் செய்துக்கொள்ளவிருக்கிறார்கள்.
3/ 8
திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் நடிகர்களின் வீடுகளில் நடைபெறும் அதே வேளையில், சென்னையின் முக்கியப் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெறவுள்ளது.
4/ 8
மே 18-ம் தேதி மாலை அவர்களின் திருமண வரவேற்பு நடக்கவிருக்கிறது. அதில் திரையுலகில் உள்ள ஆதி-நிக்கியின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொள்வார்கள்.
5/ 8
முகூர்த்தம் காலை 11 மணிக்கு. சங்கீத் மற்றும் மெஹந்தி போன்ற திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் இரண்டு நாட்களுக்கு முன்பே நடிகர்களின் வீடுகளில் நடத்தப்படுகின்றன, என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
6/ 8
ஆதியும் நிக்கியும் ஹைதராபாத்தில் குடும்பத்துடன் இருந்தாலும் சென்னையில் தங்கள் திருமணத்தை நடத்த ஆர்வமாக இருந்ததாக தெரிகிறது.
7/ 8
ஆதியின் தந்தை, ரவி ராஜா, ஒரு புகழ்பெற்ற இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர், அவர் தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றியுள்ளார். ஆதி பல படங்களில் நடித்துள்ளார், அதேபோல் நிக்கியும் நடித்துள்ளார்.