நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கியுள்ள 'வாரிசு' படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தில் ராஜு தயாரித்துள்ள இந்தப் படத்தில் விஜய் உடன் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்தப் படம் நாளை 22-ம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது.
நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த வீர சிம்ம ரெட்டி மாஸ் ஆக்ஷன் வித்தியாசமான பாலையா பாணியில் உருவாகியது . வீர சிம்ம ரெட்டி, விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இத்திரைப்படம் ஒரு வழக்கமான மாஸ் மசாலா என்டர்டெய்னர், இதில் பாலையா இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். இந்தப் படம் பிப்ரவரி 23 அன்று டிஸ்னி+ ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.
சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள மைக்கேல் படத்தில் திவ்யன்ஷா கௌசிக், கவுதம் வாசுதேவ் மேனன், வருண் சந்தேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், ஐயப்பா பி.சர்மா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி எழுதி இயக்கியுள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு முறையே கிரண் கௌஷிக் மற்றும் ஆர்.சத்தியநாராயணன் கையாண்டிருந்தனர். மைக்கேல் படம் பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. வெளியான 20 நாட்களுக்குப் வரும் 24 ஆம் தேதி ஆஹா ஓடிடியில் வெளியாகவிருக்கிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் 154-வது படம் 'வால்டேர் வீரய்யா'. இந்த படத்தை இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்கியுள்ளார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவிதேஜா நடித்துள்ளார். இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி வெளியிடவுள்ளது.
இந்தியில் பிரபல நடிகரான அக்ஷய் குமார். ஹிந்தியில் பல ஹிட் படங்களை கொடுத்திருக்கும் இவர் தமிழில் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ராஜ் மேத்தா இயக்கத்தில் அக்ஷய் குமார், இம்ரான் ஹாஷ்மி, நுஷ்ரத் பருச்சா, டயானா பென்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘செல்ஃபி’. தர்மா புரொடக்ஷனுடன், பிரித்விராஜ் புரொடக்ஷன் இணைந்து தயாரிக்கும் இப்படம் பிப்ரவரி 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ‘டிரைவிங் லைசன்ஸ்’ படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவாகியுள்ளது.