தி எக்ஸ்சேஞ்ச்: பங்குச் சந்தையில் தங்கள் இலக்குகளை அடைய எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கும் இரண்டு பெண்களைப் பின்தொடர்கிறது இந்த கதை. ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் சந்தையில் அவர்கள் வெற்றி பெறுவார்களா? ஏன்பதே படத்தின் முடிவு. இந்தப் படத்தில் ராவன் மஹ்தி, மோனா ஹுசைன், முகமது அல்மன்சூர் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.
உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மம்முட்டி முன்னணி கதாப்பத்திரத்தில் நடித்துள்ள படம் கிறிஸ்டோபர். இந்தப் படத்தில் கதையை உதய்கிருஷ்ணா எழுதியுள்ளார். மலையாளத்தில் ஆக்ஷன், த்ரில்லர் திரைப்படமாக இது வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில், மம்முட்டி உடன் வினை ராய், சரத்குமார், ஸ்நேகா, அமலா பால், ஐஸ்வர்யா லக்ஷ்மி என ஒரு பெரிய பட்டாளமே நடித்துள்ளது. இந்தப் படம் நாளை பிப்ரவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
10 டேஸ் ஆஃப் எ குட் மேன் என்பது, காணாமல் போன நபரின் வழக்கை குறித்து தேடும் ஒரு தனியார் டிடெக்டிவ் நபரை மையமாகக் கொண்ட எடுக்கப்பட்ட சீரிஸ் ஆகும். துருக்கியில் வெளியான தொடர்களில் மிகவும் சுவாரஸ்யமான தொடராக இது பார்க்கப்படுகிறது. இந்த தொடர் வரும் பிப்ரவரி 10-ம் தேதி நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.
துய்ன்: ஒரு சிறிய கிராமத்தில் நாடக நடிகராக இருக்கும் பங்கஜ் மும்பைக்கு சென்று பெரிய நடிகராக வேண்டும் என்ற கனவுகளுடன் இருக்கிறார். லாக்டவுனுக்குப் பிறகு பங்கஜின் குடும்பம் நிதி நெருக்கடியை எதிர்கொள்வதால் அவர் மும்பைக்கு செல்வது தடைபடுகிறது. இப்படியன நிலையில் அவர் தான் நடிகராக வேண்டும் என்பதை தேர்ந்தெடுப்பாரா அல்லது தனது குடுப்பத்திற்கு உதவுவாரா என்பதே படத்தின் மீதி கதை. இந்தப் படம் வரும் பிப்ரவரி 10ம் தேதி முபி தளத்தில் வெளியாக உள்ளது.
‘பேமலி மேன்’ இணையத்தொடரின் மூலம் புகழ்பெற்ற ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர், ‘ஃபார்ஸி’. கள்ளநோட்டு அச்சடிக்கும் ஷாகித் கபூர் கோஷ்டியை பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். ராஷி கண்ணா, ரெஜினா, கே.கே.மேனன், அமோல் பலேகர் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த தொடர் வரும் பிப்ரவரி 10-ம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.