முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » மாடர்ன் லவ் முதல் ஏஜென்ட் வரை... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்.. இதோ லிஸ்ட்!

மாடர்ன் லவ் முதல் ஏஜென்ட் வரை... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்.. இதோ லிஸ்ட்!

இந்த வார இறுதியில் ஓடிடியில் வெளியாகும் படங்கள் ஒரு தொகுப்பு.

 • 14

  மாடர்ன் லவ் முதல் ஏஜென்ட் வரை... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்.. இதோ லிஸ்ட்!

  காதல்: எ ஜாக்ஃப்ரூட் மிஸ்ட்ரியில் சான்யா மல்ஹோத்ரா ஒரு போலீஸ்காரராக நடிக்கிறார். யஷோவர்தன் மிஸ்ரா இயக்கிய இந்தப் படத்தில் சானியா மல்ஹோத்ராவைத் தவிர விஜய் ராஸ், ஆனந்த் ஜோஷி மற்றும் ராஜ்பால் யாதவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் 19-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.

  MORE
  GALLERIES

 • 24

  மாடர்ன் லவ் முதல் ஏஜென்ட் வரை... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்.. இதோ லிஸ்ட்!

  சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் அகில் அக்கினேனி நடித்துள்ள படம் ‘ஏஜென்ட்’. இப்படத்தில் மலையாள நடிகர் மம்மூட்டி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம் கடந்த 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சமூக வலைதளங்களிலும் இப்படத்துக்கு பயங்கர ஹைப் கொடுக்கப்பட்டது. பெரும் பொருட்செலவில் வெளியான இப்படம் வசூலில் பெறும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் வரும் 19-ம் தேதி சோனி லிவ் தளத்தில் வெளியாகவுள்ளது.

  MORE
  GALLERIES

 • 34

  மாடர்ன் லவ் முதல் ஏஜென்ட் வரை... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்.. இதோ லிஸ்ட்!

  உலக அளவில் பிரபலமான  மாடர்ன் லவ் வெப் சீரிஸின் இந்திய பதிப்பான மாடர்ன் லவ் மும்பை, மாடர்ன் லவ் ஹைதராபாத் ஆகியவை ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து மாடர் லவ் சென்னை என்ற வெப் சீரிஸ் வருகிற மே 18 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. இந்தத் தொடரில் 6 எபிசோடுகளை பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், தியாகராஜன் குமாரராஜா, அக்ஷய் சுந்தர், கிருஷ்ணகுமார் ராம்குமார், ராஜு முருகன் என 6 இயக்குநர்கள் இயக்கியுள்ளார்கள்.

  MORE
  GALLERIES

 • 44

  மாடர்ன் லவ் முதல் ஏஜென்ட் வரை... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்.. இதோ லிஸ்ட்!

  முஹாசின் இயக்கத்தில் நடிகர்கள் பாசில் ஜோசப், ஸ்ரீஜா ரவி, பினு பப்பு, இந்திரன்ஸ், சுவாதி தாஸ் பிரபு உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவான படம் கடின கடோரமீ அண்டகடஹம். இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.  லாக்டவுன் காலத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் வரும் 19-ம் தேதி அன்று சோனி லிவ் தளத்தில் வெளியாகவுள்ளது.

  MORE
  GALLERIES