முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » படம் பார்க்க ரெடியா? இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி ரிலீஸ் படங்கள் லிஸ்ட்!

படம் பார்க்க ரெடியா? இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி ரிலீஸ் படங்கள் லிஸ்ட்!

இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம் என ஓடிடியில் வெளியாகும் படங்கள் ஒரு தொகுப்பு.

 • News18
 • 17

  படம் பார்க்க ரெடியா? இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி ரிலீஸ் படங்கள் லிஸ்ட்!

  ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல்.எல்.பி இணைந்து 'மைக்கேல்' என்ற புதிய ஆக்சன் படத்தைத் தயாரிக்கிறது. இதில் சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி அதிரடியான சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தை இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார். மைக்கேல் படத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக திவ்யங்கா கவுசிக் நடித்துள்ளார். இவர்களுடன் கெளதம் மேனன், வரலட்சுமி சரத்குமார், அனசுயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கிரண் கவுசிக் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் வரும் பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  MORE
  GALLERIES

 • 27

  படம் பார்க்க ரெடியா? இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி ரிலீஸ் படங்கள் லிஸ்ட்!

  ஜெஹானாபாத் - ஆஃப் லவ் & வார் என்பது சோனி லைவில் வரவிருக்கும் திரில்லர் சீரிஸ் ஆகும். இந்த சீரிஸ் ஸ்டுடியோ நெக்ஸ்ட் தயாரித்துள்ளது. இந்த நிகழ்ச்சியை ராஜீவ் பர்ன்வால் மற்றும் சத்யன்ஷு சிங் ஆகியோர் இயக்கியுள்ளனர். இந்த சீரிஸ்க்கு ராஜீவ் கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். இதில் ரித்விக் பௌமிக், ஹர்ஷிதா கவுர் மற்றும் பரம்பிரதா சட்டோபாத்யாய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த சீரிஸ் வரும் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகவுள்ளது.

  MORE
  GALLERIES

 • 37

  படம் பார்க்க ரெடியா? இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி ரிலீஸ் படங்கள் லிஸ்ட்!

  இயக்குநர் அனுராக் காஷ்யப் எழுதி இயக்கிய இந்தி படம் Almost Pyaar with DJ Mohabbat. இந்தப் படத்தில் ஆலயா எஃப் மற்றும் புதுமுகம் கரண் மேத்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனுராக் காஷ்யப் இயக்கி 2018 ஆம் ஆண்டு வெளியான மன்மர்சியான் திரைப்படத்தில் நடித்த விக்கி கௌஷல் மீண்டும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  MORE
  GALLERIES

 • 47

  படம் பார்க்க ரெடியா? இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி ரிலீஸ் படங்கள் லிஸ்ட்!

  Romancham ஒரு ஹாரர் நகைச்சுவைத் திரைப்படமாகும். இது ஆவிகளுடன் இணைவதற்கு அட்சர பலகையைப் பயன்படுத்த முடிவு செய்யும் இளைஞர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. இந்த மலையாள ஹாரர் காமெடியில் அர்ஜுன் அசோகன், சௌபின் ஷாஹிர் மற்றும் செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  MORE
  GALLERIES

 • 57

  படம் பார்க்க ரெடியா? இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி ரிலீஸ் படங்கள் லிஸ்ட்!

  Premadesam என்ற படம் இரண்டு காதல் ஜோடியை சுற்றி நடக்கும் கதையாகும். அஜய் கதுர்வார், திரிகன், மேகா ஆகாஷ், மது ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் சித்தம் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  MORE
  GALLERIES

 • 67

  படம் பார்க்க ரெடியா? இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி ரிலீஸ் படங்கள் லிஸ்ட்!

  அனிமேஷன் பிரியர்களுக்கு விருந்தளிகும் விதமாக நெட்ஃபிளிக்ஸ்ல் புதிய சீரிஸ் வெளியாக உள்ளது. ஒரு குளிர் கிரகத்தில் உள்ள மக்கள் மர்மமான உயிரினங்களால் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர். இந்த உயிரினங்களின் தோற்றத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியுமா? அல்லது இந்த உயிரினங்கள் முழு கிரகத்தையும் அழிக்குமா? என்பதை நோக்கி இதன் கதை செல்கிறது. இந்த தொடர் வரும் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகிறது.

  MORE
  GALLERIES

 • 77

  படம் பார்க்க ரெடியா? இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி ரிலீஸ் படங்கள் லிஸ்ட்!

  பிளாக் பான்தர்: வகாண்டா போரெவர் (Black Panther: Wakanda Forever)  2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆகும். இது பிளாக் பான்தர் என்ற மார்வெல் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ஆகும். இது 2018 ஆம் ஆண்டு வெளியான பிளாக் பான்தர் என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். இந்த திரைப்படத்தை ரையன் கூக்லர் என்பவர் இயக்க, ரையன் கூக்லர் மற்றும் ஜோ ராபர்ட் கோல் ஆகியோர் கதை எழுதியுள்ளனர். இந்த படத்தில் லுபிடா நியாங்கோ, டானாய் குரைரா, மார்டின் பிறீமன், லெட்டிடியா ரைட், வின்ஸ்டன் துயூக், அங்கெலா பாசெட் மற்றும் டொமினிக் தோர்ன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வரும் ஜனவரி 1-ம் தேதி வெளியாக உள்ளது.

  MORE
  GALLERIES