கத்ரீனா கைஃப், சித்தாந்த் சதுர்வேதி மற்றும் இஷான் கட்டர் நடித்த ஃபோன் பூட் திரைப்படம் இறுதியாக இந்த வாரம் அமேசான் பிரைம் வீடியோவில் வருவதால், ஹாரர் காமெடி வகையை விரும்புபவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குர்ம்மீத் சிங் இயக்கத்தில் மூவரும் தங்கள் நடிப்பை சிறப்பாக வெளிபடுத்தியுள்ளனர். இந்நிலையில் இந்தப் படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் இந்த வாரம் வெளியாகவுள்ளது.
ஷார்க் டேங்க் இந்தியாவின் இரண்டாவது சீசன் இந்த வாரம் வெளியாக உள்ளது. வெற்றிகரமான தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் - அனுபம் மிட்டல், அமன் குப்தா, நமிதா தாபர், வினீதா சிங், பெயூஷ் பன்சால் மற்றும் அமித் ஜெயின் (அஷ்னீர் குரோவருக்குப் பதிலாக) வளரும் தொழில்முனைவோர் தங்கள் புதுமையான வணிக யோசனையை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பை இந்த சீரீஸ் வழங்க உள்ளது. மேலும் இந்த சீரிஸ் இந்த வாரத்தில் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
ஜின்னி & ஜார்ஜியாவின் வருகையுடன் இந்த வாரம் புதிய ஓடிடி வெளியீடுகளின் பட்டியல் சிறப்பாக உள்ளது. வெல்ஸ்பரியில் ஜின்னியும் ஜார்ஜியாவும் சந்திக்கும் புதிய சவால்களைப் பாருங்கள். கடந்த காலத்தின் சில ரகசியங்கள் அவர்களின் தற்போதைய மற்றும் எதிர்கால வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பது கதை. இந்த வாரத்தில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.
காந்தாரா மற்றும் கேஜிஎஃப்: அத்தியாயம் 2 ஆகியவற்றின் வெற்றிக்குப் பிறகு, கன்னடத் திரையுலகம் அதன் புதிய காக்டெய்ல் மூலம் மீண்டும் ஒரு முறை தனது தடத்தை பதித்துள்ளது. மர்ம த்ரில்லர் ஜோக்கர் வேடமிட்ட தொடர் கொலைகாரனைச் சுற்றி வருகிறது இந்த கதை நகர்கிறது. இந்நிலையில் இந்தப் படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கிரிதேவ ராஜ் இயக்கத்தில் லியோனிலா டிசோசா, யுவன் ஹரிஹரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் தி ஒய் எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம் ஒரு சைக்காலஜி த்ரில்லர் படம் ஆகும். திருமணத்திற்குப் பிறகு எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தும் ஒரு இளம் ஊமைப் பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது படத்தில் கதைக்கலம் ஆகும். இந்தப் படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நன்கு அறியப்பட்ட யூடியூபரும் நகைச்சுவை நடிகருமான புவன் பாம் தனது புதிய தொடரான தாசா கபாரை இந்த வாரம் வெளியிடுகிறார். இந்த நகைச்சுவை தொடர் வசந்த் கவ்டே என்ற துப்புரவுத் தொழிலாளியைன் வாழ்க்கையை கூறிகிறது. இதில் தாசா கபார், தேவன் போஜானி மற்றும் ஷ்ரியா பில்கோன்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது இந்த வாரம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
சவுதி வெள்ளக்கா என்ற மலையாள திரைப்படம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குக்காக நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் பெறும் ஒரு இளைஞனைச் சுற்றிய கதையாக உள்ளது. இப்படத்தில் லுக்மான் அவரன், பினு பப்பு, சுஜித் சங்கர் மற்றும் அறிமுக நாயகி தேவி வர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் இந்த வாரத்தில் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.