8 தோட்டாக்கள் படத்தின் இயக்குனர் ஸ்ரீகணேசனின் இயக்கத்தில் அதர்வா நடித்திருக்கும் திரைப்படம் குருதி ஆட்டம். மதுரையை பின்னணியாக வைத்து இந்த திரைப்படத்தை எடுத்துள்ளனர். எட்டு தோட்டாக்கள் போலவே இந்த திரைப்படத்திலும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இதில் அதர்வாவுடன் பிரியா பவானி சங்கர், ராதிகா, ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதேபோல் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
பிரபுதேவா நடித்திருக்கும் பொய்க்கால் குதிரை திரைப்படத்தில் விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்த கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடித்திருக்கிறார். தன்னுடைய மகளுக்கு இருக்கும் இருதய நோயை குணப்படுத்த அவர் எடுக்கும் முடிவுக்கு பின்னால் நடக்கும் சம்பவங்களை கொண்டு, பொய்க்கால் குதிரை படத்தை இயக்கி இருக்கிறார் சந்தோஷ் பி.ஜெயக்குமார்.
வைபவ் - வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவான காட்டேரி திரைப்படத்தை யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் ஆகிய படங்களை இயக்கிய DeeKey (டிகே) இயக்கியிருக்கிறார். திகிலை மையமாக வைத்து காட்டேரி திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வகை படங்கள் தமிழில் வெற்றியடைந்துள்ளதால், காட்டேரி படமும் வெற்றி அடையும் என படக் குழுவினர் நம்புகின்றனர்.
இந்தப் படங்களைத் தவிர பரத் நடித்துள்ள LAST 6 Hours, புதுமுகங்கள் நடித்துள்ள மாயத்திரை, துரிதம், கடைசி நொடிகள் ஆகிய படங்களும் இன்று வெளியாகியுள்ளன.Victim என்ற ஆந்தாலஜி தொடரும் Sony Liv OTT தளத்தில் வெளியாகிறது. இதில் உள்ள தொடர்களை சிம்பு தேவன், ராஜேஷ்.எம், வெங்கட் பிரபு, பா.ரஞ்சித் ஆகியோர் இயக்கியுள்ளனர்.