தனது திருமண வீடியோவை ஒளிபரப்ப பிரபல ஓடிடி தளத்திடம் பேச்சு வார்த்தை நடத்தியிருந்த நயன்தாராவுக்கு தற்போது அதிர்ச்சியை பதிலாக தந்துள்ளது அந்நிறுவனம்.
2/ 10
நானும் ரவுடி தான் படத்தில் ஒன்றாக பணிபுரிந்த நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பின்னர் காதலிக்க தொடங்கினர்.
3/ 10
இதையடுத்து கடந்த ஜூன் 9-ம் தேதி இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர்.
4/ 10
இந்தத் திருமணத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய் சேதுபதி, சூர்யா, ஜோதிகா, இயக்குநர்கள் மணிரத்னம், அட்லீ, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.
5/ 10
இதற்கிடையே தனது திருமணத்திற்காக ஒரு பைசா செலவு செய்யாமல், திருமண வீடியோவை ஒளிபரப்ப நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திடம் பேச்சு வார்த்தை நடத்தியிருந்ததால், அவர்களே முழு செலவையும் செய்ததாகக் கூறப்பட்டது.
6/ 10
நெட்ஃப்ளிக்ஸிடம் 25 கோடி டீல் பேசியிருந்ததால், திருமணத்தில் கலந்துக் கொண்டவர்கள் செல்ஃபோன் பயன்படுத்த தடை போடப்பட்டிருந்தது.
7/ 10
திருமணம் முடிந்து ஒரு மாதம் கழிந்த நிலையில் 25 கோடி அதிகம் என பின் வாங்கி விட்டதாம் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்.
8/ 10
நெட்ஃப்ளிக்ஸ் இல்லையென்றால் வேறொரு தளம் என நினைத்த நயன்தாராவுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாம்.
9/ 10
ஏற்கனவே 1 மாதமாகி விட்டதால், இன்னும் தாமதமானால், ரசிகர்களின் ஆர்வம் குறைந்துவிடும் என்று விக்னேஷ் சிவன் தற்போது இன்ஸ்டகிராமில் தங்களது திருமண படங்களை பகிர்ந்து வருகிறாராம்.
10/ 10
நெட்ஃப்ளிக்ஸ் உடனான ஒப்பந்தம் சொதப்பியதில் ஏமாற்றத்தில் இருக்கிறதாம் நயன் - விக்கி ஜோடி