எழுபது மற்றும் எண்பதுகளில் இந்தியில் நடிகை ரீனா ராய் பிரபலமாக இருந்தார். ரொமான்டிக் காமெடி திரைப்படங்கள் என்றால் அன்றைய ரசிகர்களுக்கு இன்றும் ரீனா ராய் நினைவில் நிழலாடுவார். இவரது கவர்ச்சி கதாபாத்திரங்கள் புகழ்பெற்றவை. 1983 இல் இந்தியில் வெள்ளி விழா கண்ட கமலின் சனம் தேரி கசம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அந்தக் காலகட்டத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக ரீனா ராய் இருந்தார்.
1983 இல் ரீனா ராயின் வாழ்க்கை திசை மாறியது. கிரிக்கெட் வீரர்கள் மீதான மோகம் இன்றைவிட அன்று அதிகம். ரீனா ராய் அப்போதைய பாகிஸ்தான் ஓபனிங் பேட்ஸ்மேன் மொகிசின் கானின் ஆட்டத்தில் போல்டானார். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அப்படி உச்சத்தில் இருந்த போதே திருமணம் செய்தவர் அதன் பிறகு 1985 வரை ஒருசில படங்களில் மட்டுமே நடித்தார். அதில் கமலுடன் நடித்த ராஜ் திலக்கும் ஒன்று. ஒரு மகள் பிறந்த பிறகு ரீனா ராயும், மொகிசின் கானும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பிறகு 1992 இல் மீண்டும் நடிப்புக்கு திரும்பினார்.
சுனில் தத், பெரோஸ் கான், ஜிதேந்திரா, சஞ்சய் கான், கபீர் பேடி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் நடித்திருந்தனர். மும்தாஜ், ரேகா போன்ற அன்றைய டாப் நடிகைகளும் படத்தில் இருந்தனர். எனினும் நாகின் என்ற டைட்டில் ரோலில் ரீனாதான் நடித்தார், மொத்தப் பெயரையும் சுருட்டிக் கொண்டார். 1976 ஜனவரி 19 வெளியான படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.