தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்தாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகை நஸ்ரியா நசீம். நேரம் படத்தில் அவரை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. துரு துருவென அத்தனை க்யூட்டாக இருப்பார். பின்னர் தனுஷுடன் நையாண்டி, ஆர்யாவுடன் ராஜா ராணி ஆகியப் படங்களில் நடித்தார். ராஜா ராணியில் கொஞ்ச நேரமே வந்தாலும், விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் காட்சியில் பார்வையாளர்கள் கண்களை ஈரப்படுத்தியிருப்பார் நஸ்ரியா. பின்னர் வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் ஆகியப் படங்களில் நடித்தார். பின்னர் மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துக் கொண்டார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். இதற்கிடையே ரம்ஜான் வாழ்த்துகளைக் கூறி தன் கணவருடனான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நஸ்ரியா.