திருமணத்திற்குப் பின்னர் சினிமாக்களில் நடிக்காமல் இருந்த நஸ்ரியா, சில ஆண்டுகளுக்கு முன் மலையாள படங்களில் நடிக்க துவங்கினார். இதில் பகத் பாசில் கூட நடித்த ட்ரான்ஸ் படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. சமீபத்தில் இந்த படம் நிலை மறந்தவன் என்ற பெயரில் தமிழில் வெளி வந்தது. அண்மையில் நானியுடன் அடடே சுந்தரா (Ante Sundaraniki) படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.