நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் 6 ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வருகின்றனர். இருவரும் அடிக்கடி ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாவில் ஷேர் செய்வார்.
2/ 9
தற்போது நயன்தாராவின் அம்மா மற்றும் அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். நயன்தாராவின் அப்பா புகைப்படத்தை இன்ஸ்டாவில் விக்கி பதிவிடுவது இதுவே முதல்முறை. இதில் நயன்தாராவின் அப்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
3/ 9
மேலும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் எப்போது திருமணம் செய்துக்கொள்ள போகிறார்கள் என்ற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் உள்ளது.
4/ 9
அதுமட்டுமில்லாமல் இருவரும் கடவுள் பக்தி அதிகம் உள்ளவர்கள். எனவே அடிக்கடி கோயில்களுக்கும் சேர்ந்து சென்று தரிசனம் செய்வார்கள்.
5/ 9
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ’காத்து வாக்குல ரெண்டு காதல் ’திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுப்பெற்றது. அப்போது கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.