நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் நேற்று மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. திருமணத்தில் பல கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. திரை வட்டார நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் இவர்களின் திருமணம் நடைப்பெற்றது. திருமண புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு திருமண பரிசாக 20 கோடி மதிப்புள்ள பங்களா ஒன்றை பரிசளித்துள்ளதாக கூறப்படுகிறது. 6 ஆண்டுகளுக்கு மேல் காதலித்து தற்போது திருமண வாழ்க்கையில் நுழைந்திருக்கும் நயன், விக்கி தம்பதியினருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருப்பதி சென்று தரிசனம் செய்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.