தேனிலவுக்காக தாய்லாந்துக்கு சென்றுள்ள விக்னேஷ் – நயன்தாரா ஜோடியின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இருவருக்கும் இடையே கடந்த9ம் தேதி மாமல்லபுரத்தில் திருமணம் நடைபெற்றது. சுமார் 6 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் முக்கிய பிரபலங்கள் சூழ திருமணம் முடித்துக் கொண்டனர். திருப்பதி மற்றும் கேரள கோயில்களுக்கு சென்று விக்னேஷ் சிவன் – நயன்தாரா வழிபட்டனர். கேரளாவில் சில நாட்களை கழித்த இருவரும் அங்கிருந்து தாய்லாந்திற்கு ஹனிமூனுக்காக சென்றனர். தாய்லாந்தில் இருவரின் ரொமான்டிக்கான புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டது. தற்போது அடுத்தடுத்து தாய்லாந்து புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன. விரைவில் இருவரும் சென்னை திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாரா ஷாரூக்கான் நடிக்கும் ஜவான், சிரஞ்சீவியின் காட்ஃபாதர் உள்ளிட்ட படங்களில் இடம்பெற்றுள்ளார். அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். லைகா தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.