நயன்தாரா,விக்னேஷ் சிவன் இருவரும் 6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வருகின்றனர். இருவரின் திருமணமும் எப்போது என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர். தற்போது ஜூன் 9 ஆம் தேதி நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். திருமணம் மகாபலிபுரத்தில் நடை பெறவுள்ளது. திருமணத்திற்கு ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட நெருங்கிய நண்பர்களை மட்டுமே அழைத்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் நேரில் சென்று பத்திரிகை வைத்தனர். திருமணத்தில் பங்கேற்பவர்களுக்கு மொபைல் எடுத்து செல்ல கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருமண புகைப்படம் மற்றும் வீடியோ உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. காதல் ஜோடியாக வலம் வந்த இருவரும் தற்போது கணவன் , மனைவியாக வலம் வர உள்ளனர் என்பது ரசிகர்களுக்கு உற்சாகமாகவுள்ளது. நயன்தாரா, விக்கியின் திருமண புகைப்படங்களை காண ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.