நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தில் புரோகிதர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் நானும் ரவுடி தான் படத்தில் முதன் முதலில் இணைந்து வேலை செய்தனர். அதன் பிறகு இருவரு காதலில் விழுந்ததாக செய்திகள் வலம் வந்தன. ஆனால் இது குறித்து சம்பந்தப்பட்ட இருவருமே வாய் திறக்காமல் இருந்தனர். இந்நிலையில் இவர்களது திருமணம் கடந்த ஜூன் 9-ம் தேதி நடைப்பெற்றது. இதில் முக்கிய திரைப்பிரபலங்களும், இருவரின் குடும்பத்தினரும் கலந்துக் கொண்டனர். இதையடுத்து ரசிகர்கள் இணையத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். நயன் - விக்கி திருமணத்தில் அவர்களது உடை முதல் உணவு வரை அனைத்தும் பேசு பொருளானது. இந்நிலையில் தங்கள் திருமணத்தை நடத்தி வைத்த புரோகிதர்களுக்கு நயன் - விக்கி அளித்திருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 5 புரோகிதர்களுக்கு தலா 5 லட்சம் வீதம் மொத்தம் 25 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம். கொஞ்ச நேர வேலைக்கு இவ்வளவு சம்பளமா என இணையத்தில் தங்கள் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள் நெட்டிசன்கள்.