நயன்தாரா விக்னேஷ் சிவனின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் லீக்காகி உள்ளது.
2/ 9
தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா, தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.
3/ 9
அதோடு காதல் சர்ச்சைகளிலும் சிக்கினார்.
4/ 9
வல்லவன் படத்தில் நடிக்கும் போது சிம்புவுடன் காதலில் விழுந்த நயன்தாரா, சில வருடங்கள் கழித்து அவரை விட்டு பிரிந்தார்.
5/ 9
பின்னர் நடிகர் பிரபுதேவாவை காதலித்தார். ஆனால் இதுவும் தோல்வியில் முடிந்தது.
6/ 9
இதற்கிடையே நானும் ரவுடி தான் படத்தில் நடிக்கும் போது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியது.
7/ 9
இந்நிலையில் இவர்களின் திருமணம் வரும் ஜூன் 9-ம் தேதி நடக்கிறது. மகாபலிபுரத்தில் நடக்கும் இத்திருமணத்தில் முக்கிய சினிமா நட்சத்திரங்கள் கலந்துக் கொள்கிறார்கள்.
8/ 9
இதைப் பார்த்த ரசிகர்கள் விக்கி - நயன் ஜோடிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
9/ 9
தற்போது அவர்களின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் லீக்காகி உள்ளது.