தொகுப்பாளினி திவ்ய தர்ஷினியை செல்லமாக டிடி என அழைப்பார்கள்.டிடி விஜய் டிவியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். திவ்ய தர்ஷினி பவர் பாண்டி, சர்வம் தாளமயம் என சில படங்களிலும் நடித்துள்ளார். ‘ஜோஷ்வா இமைப்போல் காக்க’என்ற படத்திலும் நடித்துள்ளார்.சுந்தர்.சி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். டிடி தொகுப்பாளினி பல ஹீரோயின்களுக்கு டப்பிங்கும் பேசியுள்ளார். இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்தில் டிடி கலந்துக்கொண்டுள்ளார். ரஜினிகாந்த, ஷாருக்கான் உள்ளிட்ட நட்சத்திரங்களை அழைத்த நயன்தாரா தொகுப்பாளினி டிடியையும் திருமணத்திற்கு அழைத்துள்ளார். திருமணம் மட்டுமில்லாமல் மெஹந்தி நிகழ்ச்சியிலும் டிடி கலந்துக்கொண்டுள்ளார். இதன் மூலம் டிடி நயன்தாராவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது தெரிகிறது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்தில் டிடி இந்த அழகான புடவையில் கலந்துக்கொண்டுள்ளார்.