கேரளாவை பூர்விகமாக கொண்ட நயன்தாரா கிறிஸ்டியன் குடும்பத்தில் பிறந்தார். நயன்தாராவுக்கு பெற்றோர்கள் வைத்த பெயர் டயானா. நயன்தாரா கேரளா, திருவல்லாவில் இருக்கும் மார்தோமா காலேஜில் ஆங்கில இலக்கியம் படித்தார் 2003 ஆம் ஆண்டு திருச்சூர் அட்வர்டைசிங் கிளப் நடத்திய போட்டியில் கேரளாவின் சிறந்த மாடல் என்ற விருதை நயன்தாரா வென்றார். அதன் பின்பு தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார். 2003 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘மனசினக்கரே’என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளியான ‘ஐயா’ படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து படங்கள் நடித்த நயன்தாரா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக வலம் வந்தார். 2011 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ஆர்யா சமாஜ் கோயிலில் கிறிஸ்டியன் மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறினார் நயன்தாரா.. பின்பு இந்து மதத்திற்கு மாறியதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது, மேலும் அவரது மேடைப் பெயரான நயன்தாரா அவரது அதிகாரப்பூர்வ பெயராக மாறியது. தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டதோடு தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார் . இந்நிலையில் பல வருடங்களாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை நயன்தாரா திருமணம் செய்துக்கொள்ள இருக்கிறார்.