கோலிவுட்டின் நட்சத்திர தம்பதி நயன்தாரா - விக்னேஷ் சிவனின் லேட்டஸ்ட் படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன. நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் முதன்முதலில் நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றினர். அதன் பிறகு இவர்களது நட்பு காதலாக மாறியது. இதையடுத்து கடந்த ஜூன் 9-ம் தேதி இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். அதன் பிறகு ஹனிமூனுக்காக தாய்லாந்து பறந்த விக்கி - நயன் ஜோடி இணையத்தில் அந்த படங்களை பதிவேற்றியது. அந்தப் படங்கள் ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் தனது இன்ஸ்டகிரமில் புதிய படத்தைப் பகிர்ந்துள்ளார் விக்கி. அதில், விக்கியை இறுக்கமாக கட்டியணைத்துள்ளார் நயன்.