நடிகை நயன் தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கிட்டத்திட்ட 6 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகின்றனர். திரைப்படங்களில் பிசியாக இருந்தாலும் இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று நேரத்தை செலவிடுவார்கள்.
2/ 6
இந்த ஆண்டு புத்தாண்டை கொண்டாட விக்கி மற்றும் நயன்தாரா துபாய்க்கு சென்றிருந்தனர். அப்போது இருவரும் புர்ஜ் கலீஃபா முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
3/ 6
தற்போது விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
4/ 6
அதில் ‘ சீக்கிரம் வேலையை முடித்துவிட்டு நீண்ட நாள் விடுமுறை எடுக்க காத்திருக்கேன், எனது பேவுடன் ட்ராவல் செய்வதை மிஸ் செய்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
5/ 6
இதில் நயன்தாரா க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார்.இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
6/ 6
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ’காத்து வாக்குல இரண்டு காதல்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.