முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » தஞ்சாவூர் கிராமத்துக்கு நயன்தாரா விசிட்.. குல தெய்வக்கோயிலில் வழிபாடு!

தஞ்சாவூர் கிராமத்துக்கு நயன்தாரா விசிட்.. குல தெய்வக்கோயிலில் வழிபாடு!

நடிகை நயன்தாரா தனது கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் குலத்தெய்வ கோயிலில் வழிபாடு செய்தார். செய்தியாளர்  : எஸ்.குருநாதன்.

 • 16

  தஞ்சாவூர் கிராமத்துக்கு நயன்தாரா விசிட்.. குல தெய்வக்கோயிலில் வழிபாடு!

  நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த வருடம் வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றனர். திருமணமாகி சில மாதங்களிலேயே குழந்தை பெற்றது பெரிய சர்ச்சை ஆனது.

  MORE
  GALLERIES

 • 26

  தஞ்சாவூர் கிராமத்துக்கு நயன்தாரா விசிட்.. குல தெய்வக்கோயிலில் வழிபாடு!

  ஆனால் எங்களுக்கு 5 வருடத்திற்கு முன்பே பதிவு திருமணம் நடைபெற்றுவிட்டது என அவர்கள் விளக்கம் தெரிவித்தனர். குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலகம் என பெயரிட்டு இருப்பதாக விக்னேஷ் சிவன் ஏற்கனவே கூறி இருந்தார்.

  MORE
  GALLERIES

 • 36

  தஞ்சாவூர் கிராமத்துக்கு நயன்தாரா விசிட்.. குல தெய்வக்கோயிலில் வழிபாடு!

  இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா தனது மகன்களில் முழு பெயரை அறிவித்து இருக்கிறார். உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என தன் இரண்டு மகன்களின் பெயர்களையும் அவர் அறிவித்து இருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 46

  தஞ்சாவூர் கிராமத்துக்கு நயன்தாரா விசிட்.. குல தெய்வக்கோயிலில் வழிபாடு!

  தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் நடிகை நயன்தாரா கணவரும், திரைப்பட இயக்குனருமான விக்னேஷ் சிவன் குலத்தெய்வம் கோவில் ஆகும்.

  MORE
  GALLERIES

 • 56

  தஞ்சாவூர் கிராமத்துக்கு நயன்தாரா விசிட்.. குல தெய்வக்கோயிலில் வழிபாடு!

  திருமணத்திற்கு முன் இருவரும் இந்த கோவிலுக்கு வந்த நிலையில், தற்போது இருவரும் மீண்டும் இன்று கோவிலுக்கு வந்தனர். இவர்கள் வருகையை ஓட்டி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன.

  MORE
  GALLERIES

 • 66

  தஞ்சாவூர் கிராமத்துக்கு நயன்தாரா விசிட்.. குல தெய்வக்கோயிலில் வழிபாடு!

  தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள நொண்டி கருப்பு, முனியாண்டவர், மதுரைவீரன், அரியத்தங்கால் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு தீபம் காட்டி இருவரும் பயப்பக்தியுடன் வழிப்பட்டனர். நயன்தாரா வருவதை அறிந்த அப்பகுதி மக்கள் கோயிலில் கூடினர்.

  MORE
  GALLERIES