லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கடந்த 7 ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.
2/ 9
விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த 'நானும் ரவுடி தான்' படப்பிடிப்பில் இருவரும் சந்தித்ததில் அவர்கள் காதலில் விழுந்தனர்.
3/ 9
நீண்ட காலமாக ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் இவர்கள் சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
4/ 9
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள இருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
5/ 9
இதற்கிடையில் நயனும் விக்கியும் ஒன்றாக இணைந்து தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியிருக்கிறார்கள்.
6/ 9
அவர்கள் தயாரிப்பில் உருவாகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகிறது.
7/ 9
இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் அருகே உள்ள பாடிகார்டு முனீஸ்வரர் கோயிலில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிறப்பு பூஜை செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
8/ 9
இந்த ஜோடி இன்னோவா காரின் லேட்டஸ்ட் வெர்ஷனை வாங்கியுள்ளதாகவும், இதற்காகவே பூஜை நடந்ததாகவும் தெரியவந்துள்ளது.
9/ 9
இந்தப் படங்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.