நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்துக்கொள்ள உள்ளனர். இந்நிலையில் நயன்தாரா முதல் நஸ்ரியா வரை, நடிகைகள் எந்த வயதில் திருமணம் செய்துக்கொண்டார்கள் என்பது பற்றிய தகவல்கள் இதோ.
2/ 10
ஜோதிகா 2006 ஆம் ஆண்டு சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அப்போது அவருக்கு வயது 29.
3/ 10
காஜல் அகர்வால் 2020 ஆம் ஆண்டு கவுதம் கிச்சலு என்பவரை பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டார். அப்போது காஜலின் வயது 35.
4/ 10
நடிகை ஷ்ரேயா ரஷியாவை சேர்ந்த ஆண்ட்ராய் கோஷிவ் என்பவரை 36 வயதில் திருமணம் செய்துக்கொண்டார்.
5/ 10
நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் இணைந்து கஜினிகாந்த், டெடி, காப்பான் ஆகிய படங்களில் நடித்துள்ளனர். இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். அப்போது சாயிஷாவுக்கு 21 வயது.
6/ 10
சமந்தா, நாக சைதன்யாவை திருமணம் செய்துக்கொண்ட போது சமந்தாவுக்கு 30 வயது.
7/ 10
மலையாளத்தில் முன்னணி நடிகரான ஃபகத் பாசிலை நஸ்ரியா 19 வயதில் திருமணம் செய்துக்கொண்டார்.
8/ 10
ஆதி, நிக்கி கல்ரானி திருமணம் சமீபத்தில் கோலாகலமாக நடைப்பெற்றது. அப்போது நிக்கி கல்ரானிக்கு 30 வயது.
9/ 10
நடிகை ப்ரணித்தா தனது 28வது வயதில் திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.
10/ 10
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனை ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்துக்கொள்ள உள்ளார். நயன்தாராவுக்கு தற்போது 37 வயதாகிறது.